திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய்க்கும் எனக்கும் சண்டையா.? உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்.!
தமிழ் திரைத்துறையில் மிகப் பெரும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன் முதலில் 'மாநகரம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் திரைத்துறையில் இருந்து நீண்ட நாள் இடைவேளை எடுத்துக் கொண்டார்.
இப்படத்திற்கு பின்பு மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருந்தார். இப்படங்களுக்கு பின்பு தற்போது விஜய் நடிப்பில் ' லியோ ' திரைப்படத்தை இயக்கிய வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இருந்த பிரச்சனையால் லியோ திரைப்படத்திலிருந்து விலகி விட்டார் என்று வதந்தி பரவியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். "எனக்கும் விஜய்க்கும் இடையில் சண்டை என்கிற செய்தியை பார்த்து நானும் விஜய்யும் சிரித்துக்கொண்டோம். மேலும் லியோ திரைப்படத்தில் கமல் டப்பிங் பேசி இருக்கிறாரா என்பது குறித்து ரிலீசான பின் தெரிய வரும். இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்று நாங்கள்தான் முடிவு செய்தோம். வெற்றி விழா அன்று பார்த்துக் கொள்கிறோம்" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.