திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"LCU வில் முதன் முறையாக.. லோகேஷ் திருந்திட்டாரா?!" தலைவர் 171 அப்டேட்!
"மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து அடுத்ததாக "கைதி" படத்தை இயக்கினார். இதையடுத்து LCU பார்முலாவை உருவாக்கி, அதை வைத்து விஜயின் "மாஸ்டர்" படத்தை இயக்கினார்.
இதன் இரண்டாம் பாகமான "விக்ரம்" திரைப்படத்தை கமலஹாசனை வைத்து இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் திரைப்படம் கமலஹாசனுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது விக்ரம் திரைப்படம்.
இதையடுத்து மீண்டும் விஜயுடன் இணைந்து வெளியான "லியோ" திரைப்படமும் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியுடன் இணைந்து "தலைவர் 171" படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார்.
இது குறித்து பேசிய லோகேஷ், "தலைவர் 171 படத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் ஆக்ஷன் தெறிக்கவிடும்" என்று கூறியுள்ளார். "இவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே கஞ்சா முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்போது இவர் திருந்தி விட்டாரா?" என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.