பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னை பாஷையில் மைக்கில் கத்திய லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி அடைந்தார் கமலஹாசன்
கோலிவுட் திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியது. இப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜிற்கு ரசிகர் கூட்டம் கூடியது.
இதற்கு முன்பு சில படங்கள் இயக்கிருந்தாலும் 'விக்ரம்' திரைப்படத்தின் மூலமே லோகேஷ் கனகராஜ் பிரபலமானார். இப்போது லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிலையில், 'விக்ரம்' படத்தின் படபிடிபிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'விக்ரம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்தல பத்தல' எனும் பாடலுக்கு கமலஹாசன் முதல் டேக்கிலேயே நன்றாக நடனமாடியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தன்னையே மறந்து கட் கூட சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் மைக்கில் யாரோ சென்னை பாஷையில் கத்துவது போல கேட்டிருக்கிறது. கமலஹாசன் திரும்பி பார்க்கும் பொழுது லோகேஷ் கனகராஜ் கையில் மைக் வைத்திருந்திருக்கிறார். மைக் இருப்பதே மறந்துவிட்டு லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியில் கத்தியதை கமலஹாசன் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.