96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தந்தையின் மறைவிற்குப் பின்பு, முதன்முறையாக லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! உற்சாகமடைந்த ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார். ஆனால் நாளடைவில் அவர் மற்றொரு போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. இந்தநிலையில் கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் லாஸ்லியா குடும்பமே சோகத்தில் மூழ்கிப் போனது.
. Happynewyear 2021 ♥️ pic.twitter.com/MAzjM8ZfMD
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 3, 2021
ஒரு மாதம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாஸ்லியா தந்தையின் உடல் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா தந்தையின் மறைவிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.