மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையாகும் சந்தன கடத்தல் வீரப்பன் மகள்! அடேங்கப்பா.. டீசரே வேற லெவலில் சும்மா மிரட்டுதே!!
சந்தன கடத்தல் வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சந்தன கடத்தல் வீரப்பன். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு ஏராளமான சீரியல்கள் மற்றும்
வன யுத்தம், வில்லாதி வில்லன் வீரப்பன் என பல படங்கள் உருவாகியுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகள் வித்யாராணி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் விஜயலட்சுமி தற்போது மாவீரன் பிள்ளை என்ற படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கியுள்ளார். இப்படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
மது ஒளிப்பு, விவசாயிகள் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் என அனைத்தையும் மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் விஜயலட்சுமி போராளியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.