மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் பொய்.. இதுதாங்க நடந்தது! தன் மீது குற்றம்சாட்டிய சின்மயி! விளக்கமளித்த வைரமுத்து மகன்!!
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடு புகார் அளித்து வந்தார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துக்கு அண்மையில் கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாடகி சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து மறுபரிசீலினை செய்யவிருப்பதாக விருது வழங்கும் குழு அறிவித்தது. இந்நிலையில் வைரமுத்து தனக்கு வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட விருதை தான் திருப்பி அளிப்பதாக கூறினார்.
இந்தநிலையில் நெட்டிசன் ஒருவர் சின்மயிடம், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த வைரமுத்துவை ஏன் உங்கள் திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் அந்த ஆள கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என தெரிவித்துள்ளார்.
Andha aala koopda solli torture pannunadhe avar magan dhaan. unnaya pola periyya aal dhan maama avarum. ellam orey kuttaila ooruna mattaidhan. Molest pannarunu sonna apramavum appava kalaynathukku koopdu nu solla koodiya aal
— Chinmayi Sripaada (@Chinmayi) May 28, 2021
இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியிடம் கேட்டநிலையில், அதற்கு அவர் இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் அவர் மீதிருந்த அதிருப்தியில் எனது அப்பா அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.
அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கித் தருமாறு சின்மயி என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். பின்னர் அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு, ஆசிபெற்று திருமணத்திற்கு வரவேற்றதாக
பதில் அளித்துள்ளார்.
This is just another lie. She wanted to invite my dad for her wedding. But my dad did not give appointment as he was upset with her. She requested me to get an appointment. I got it for her. She went to his house alone, touched his feet, got blessings and invited him. https://t.co/e4eB08d24A
— Madhan Karky (@madhankarky) May 28, 2021