மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது என்ன புதுசா இருக்கு.. அதிர்ஷ்டசாலியான மாதவன்!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் மாதவன். தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் மாதவன் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு அதிர்ஷ்டசாலி என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்திற்கு நடிகர் மாதவன் தான் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ஷர்மிளா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.