#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகான்.. காந்தி மகான்!! செம மிரட்டலாக வெளிவந்த விக்ரமின் மகான் டீசர்! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம்,
பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் அதில் வாணி போஜன் ,சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
#MahaanTeaser https://t.co/PygCbE0mqH#ChiyaanVikram #Mahaan #MahaanOnPrime #MahaanFromFEB10 @PrimeVideoIN @7screenstudio
— karthik subbaraj (@karthiksubbaraj) January 31, 2022
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் மகான் படம் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.