மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மணி செம ஜாலிதான்.. கணவருடன் எங்கே சென்றுள்ளார் பார்த்தீங்களா.! டபுள் மீனிங் கேப்டனுடன் பகிர்ந்த புகைப்படம்!!
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல முன்னணி தொடர்களில் பல வித்தியாசமான ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் அன்பே வா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து வருகிறார்.
அவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளநிலையில் விவாகரத்து பெற்றவர். மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி இருவரும் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தாங்கள் என்ன செய்தாலும் அதனை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் மகாலட்சுமி தனது கணவருடன் லவ் டுடே படத்திற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார். அப்பொழுது எடுத்த செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். love today-ல் இருக்க வேண்டும் என படத்தையும், அனைவரும் காதலில் இருக்க வேண்டும் எனவும் டபுள் மீனிங் கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.