மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முரட்டுத்தனமான கணவரே.. நடிகர் ஆர்யாவுக்கு அவரது மனைவி செய்துள்ள ஸ்பெஷல் ட்விட்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான டெடி என்ற படத்தில் நடித்து வந்தார். பின்னர் மௌனகுரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாந்தகுமார் இயக்கத்தில் உருவான மகாமுனி ,படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்து படம் வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா,ஜெயபிரகாஷ், இளவரசு, அருள்தாஸ், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் முழுவதும் அரசியலை மையமாக கொண்ட இப்படத்தில் மனிதர்களின் குணாதிசயங்கள் சிலவற்றை விவரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Such an intense and refreshing look hubzy! @arya_offl 😱😱😘😘😘
— Sayyeshaa (@sayyeshaa) May 16, 2019
Can’t wait for #MagaMuni 😍😍😍 pic.twitter.com/KXFy97nJ0h
இந்நிலையில் இந்தப் படம் குறித்து நடிகர் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா, மிகவும் புத்துணர்ச்சி கொண்ட முரட்டுத்தனமான கணவரே உங்களின் மகாமுனி படத்திற்காக என்னால் காத்திருக்க இயலவில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.