திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான சர்காரு வாரிபட்டா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரி விக்ரம் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்தில் ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.