மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்ரம் படத்தை பார்த்த தெலுங்கு ஸ்டார் ஸ்டார் மகேஷ் பாபு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
உலகநாயகன் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் திரைப்படம் வசூலை வாரி இறைத்து வருகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்த நடிகர் மகேஷ் பாபு பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், விக்ரம் ஒரு ப்ளாக் பஸ்டர் சினிமா. நவீன காலத்தின் அருமையான படைப்பு. இப்படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கலந்துரையாடி அறிந்துக்கொள்ள விருப்பமாக உள்ளேன். விக்ரம் மெய்மறக்கச் செய்யும், உணர்வுபூர்வமான படம். சகோதரர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள்.
#Vikram... Blockbuster Cinema!! A New-Age cult classic!! @Dir_Lokesh would love to catch up with you and discuss the entire process of Vikram! Mind-bending…Sensational stuff brother 👏👏👏
— Mahesh Babu (@urstrulyMahesh) July 2, 2022
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இதற்கு மேல் சிறப்பாக நடிக்கவே முடியாது என்ற அளவிற்கு அவர்களது உழைப்பை கொடுத்துள்ளனர். அனிருத் சிறந்த பின்னணி இசையை கொடுத்துள்ளீர். நீங்கள் எப்போதுமே சிறந்தவர்தான். விக்ரம் பாடல்கள் எனது ப்ளே லிஸ்ட்டில் நீண்டகாலத்திற்கு இருக்கும்.
And finally about the legend @ikamalhaasan... not qualified enough to comment about the acting 😊 All I can say is.. as your biggest fan, it was one of my proudest moments!! Congrats to you Sir and your wonderful team. 👍👍👏👏👏@RKFI @Udhaystalin
— Mahesh Babu (@urstrulyMahesh) July 2, 2022
கடைசியாக லெஜெண்ட் கமல் சாரை குறித்து. அவரைப் பற்றி விமர்சனம் எழுத எனக்கு தகுதி இல்லை. அவரது மிகப்பெரிய ரசிகன் என்ற அடிப்படையில் இது எனக்கு மிகவும் பெருமையான தருணம். கமல்சார் உங்ளுக்கும், உங்களது டீமுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.