மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்.எஸ் ராஜமௌலியுடன் இணையும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மகேஷ்பாபு. இவர் அத்திரையுலகின் சூப்பர்ஸ்டாராகவும் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகிறது.
இதற்கு முன்னதாக மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான Sarkaru Vaari Paata திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் 29 வது திரைப்படத்தை இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்குவது உறுதியாகியுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலியுடன் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது 29 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஆர்.ஆர்.ஆர் படத்தை விட பெரிய அளவில் பேசப்படும் என தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.