மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாளவிகா மோகனனா இது.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?
2013ம் ஆண்டு "பட்டம் போலே" என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து 2019ஆம் ஆண்டு தமிழில் ரஜினியின் "பேட்ட" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 2021ம் ஆண்டு விஜயின் "மாஸ்டர்" படத்தில் நடித்திருந்தார்.
கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மோகனன், ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனனின் மகளாவார். மேலும் வலைத்தொடர்களிலும், இசைக் காணொளிகளிலும் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். கடைசியாக தமிழில் "மாறன்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "தங்கலான்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பலோயர்கள் உள்ளனர்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக, இளம்பச்சை நிற சேலையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.