மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புடவையில் கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்... சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் புகைப்படம் .!
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து பெயர் பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் 2013 ஆம் வருடம் 'பட்டம் போலே' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த பல படங்களை தமிழில் நடித்து வருகின்றார் .
தனுஷின் மாறன் திரைப்படத்தில் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராததால், தற்போது அவர் இந்தி மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்ற நிலையில் புடவையில் கவர்ச்சி கன்னியாக இருக்கும் புகைப்படத்தை மாளவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது ரசிகர்கள் அப்புகைப்படத்தை ரசித்து சேர் செய்து வருகின்றனர்.