மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மோசடி நபர்களின் பக்கத்தை தயவு செய்து பின் தொடராதீர்கள்" பிரபல நடிகையின் உருக்கமான பேச்சு..
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். இவர் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு "மயோக்கம்" என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் வெற்றி பெற்றாலும், இவரது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
கரு. பழனியப்பன் இயக்கத்தில் விஷால் நடித்த "சிவப்பதிகாரம்" திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ். 2008ஆம் ஆண்டு வெளிவந்த "குசேலன்" திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு பிரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மம்தா, 2012ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2010ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மம்தா மோகன்தாஸ், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் "மம்தா மோகன்தாஸின் அவல வாழ்க்கை" என்ற தலைப்பில் கீத்து நாயர் என்பவர் பேஸ்புக்கில் எழுதிய பதிவை பார்த்து மம்தா அதிர்ச்சியடைந்து, "தயவு செய்து இது போன்ற மோசடி நபர்களின் பக்கத்தை பின் தொடராதீர்கள்" என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.