வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
திடீரென்று ரஜினியை சந்தித்த மலையாள நடிகர்கள். என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பம் முதல் தற்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார் ரஜினிகாந்த்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இப்படத்திற்கு பின்பு ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருக்கிறார். இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இது போன்ற நிலையில், 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதனால் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் ரஜினிகாந்த்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து கேரளா நடிகர்களான ஜெயக்குமார் மற்றும் 2018 படகுழுவினர் இணைந்து ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்தனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.