மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரி செல்வராஜுக்கு காரை பரிசாக வழங்கிய உதயநிதி ஸ்டாலின்; மாமன்னன் வெற்றியை தொடர்ந்து கொண்டாட்டம்..!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வழங்கி இருக்கிறது.
இந்த படம் பல சர்ச்சைகளை சூழ்ந்து பின் பட்டித்தொட்டியெங்கும் பரவிய நிலையில், படத்தின் வெற்றி நல்ல வகையில் அமைந்தது. இதனால் படக்குழு நேற்று படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றையும் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார்.