96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா: எழுத்துப் பிழையுடன் ரஜினியை வாழ்த்திய மம்மூட்டி..!
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி மலையாள நடிகரும் மெகா ஸ்டாருமான மம்மூட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மெகா ஹிட்டான தளபதி படத்தில் இணைந்து நடித்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான நடிகர் மம்மூட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த். எதிர்வரும் ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் இருங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Happy Birthday Dear @rajinikanth have a great year ahead.Stay Happy , Healthy & Blessed always 😊
— Mammootty (@mammukka) December 12, 2022
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்பா pic.twitter.com/Aj2PPzPB7P
நடிகர் மம்மூட்டி தனது பதிவில் நண்பா என்ற வார்த்தையில் மட்டும் சிறு எழுத்துப் பிழை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.