மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னணி நடிகருக்கு எனிமியாகும் சாக்லேட் பாய் ஆர்யாவிற்கு ஜோடி இந்த நடிகையா?? தீயாய் பரவி வரும் தகவல்!!
தமிழ் சினிமாவில் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி (Enemy). சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து இதற்கு முன் அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மினி ஸ்டுடியோ தயாரிக்கும் எனிமி படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படும்நிலையில் அவருக்கு ஜோடி யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு ஜோடியாக
பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மம்தா ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.