மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம்! செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை!!
சன் மியூசிக்கில் விஜேவாக இருந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹுசைன் என்பவரை காதலித்த நிலையில், பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில், அவர்களை எதிர்த்து நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினர். அதனை தொடர்ந்து அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரகளை செய்து வருகிறார்.
திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாத மணிமேகலை தற்போது குடும்பத்தினரோடு இணைந்துள்ளார். தனது தாய் மற்றும் தம்பியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது அப்பா அவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் மணிமேகலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.