இதுதான் நடந்தது.. கேன்சருடன் போராடிய மனிஷா கொய்ராலா.! பட்ட துயரங்கள் இவ்வளவா??



manisha-koirala-shares-about-cancer-diagnosis

ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் இந்தியன், உயிரே, முதல்வன், ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா

தமிழ், இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்த இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஊடகம் ஒன்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: "என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?

Manisha kirala

விட்டு சென்ற உறவினர்கள் 

அவர் கூறியதாவது, அனைவரும் அவரவர் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனமாக இருங்கள். எனக்கு பெரிய குடும்பம், ஏராளமான உறவினர்கள் உள்ளனர். அனைவருமே நன்கு வசதியானவர்கள்தான். ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என்னுடன் யாருமே இல்லை. என் நண்பர்கள் உட்பட அனைவரும் என்னை விட்டு விலகி விட்டார்கள்.

நோயால் படும் துயரம் 

அப்பொழுது என்னுடன் இருந்தது எனது பெற்றோர், சகோதரர், சகோதரிகள்தான். புற்றுநோய் பாதித்தபோது பல விஷயங்கள் எனக்கு நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் தற்போது எனது உடல் இல்லை. எந்த வேலையையும் என்னால் செய்ய முடியவில்லை. இப்போதும் மன அழுத்தத்தோடுதான் நான் உள்ளேன். அதே வலியோடுதான் எனது வேலைகளை செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புற்று நோயை விரட்டும் பழைய சாதம்.. ஆய்வில் வெளிவந்த உண்மை.!