மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சேலை என்பது ஆடை அல்ல; அது ஒரு மொழி"! மஞ்சு வாரியரின் அசத்தல் ட்வீட் வீடியோ!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் மஞ்சு வாரியர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகி, சினிமா தயாரிப்பாளர் மற்றும் கிளாசிக்கல் டான்ஸ் போன்ற பல பரிணாமங்களை கொண்டவர். மலையாள சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர்.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த 'பச்சையம்மா' கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. உணர்வுபூர்வமான தாயாக எதார்த்தமான நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார் மஞ்சு வாரியர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படத்தில் தல அஜித்குமாருடன் இணைந்து நடித்து ஆக்சன் காட்சிகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்திருந்தார் மஞ்சு வாரியர். மேலும் அஜித்குமாருடன் இந்தியா முழுவதுமான 'பைக்' சுற்று பயணத்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் சேலை அணிந்த தன்னுடைய புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார் மஞ்சு வாரியர். 'செப்பு' சிலையாக சிரித்துக் கொண்டிருக்கும் மஞ்சு வாரியரின் புகைப்படமும் வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. "சேலை என்பது ஆடை அல்ல; அது ஒரு மொழி" என்ற வாசகத்துடன் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர். இவருக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?"
😊💙
— Manju Warrier (@ManjuWarrier4) February 27, 2023
📸 #shikku_j_official__
👗 #sameerasaneesh pic.twitter.com/4sTnOZbLHP