மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் பிடிக்கலைனா அதை செய்யுங்க.! குறை சொல்லாதீங்க.! நடிகர் மன்சூர் அலிகான் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6 சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதங்கள், மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 ல் 21போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி.பி முத்து சில காரணங்களால் தானாகவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், என்னை பிக்பாஸில் கலந்து கொள்வதற்காக அழைத்தார்கள். நான் எனக்கு விருப்பமான தொகையை சம்பளமாக கேட்டேன். அத்துடன் அவர்கள் பேச்சை நிறுத்திகொண்டனர். பிக்பாஸ் குறித்து குறை கூறுபவர்கள் எதற்காக நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள். டிவியை மாற்றி வேற சேனலை பார்க்க வேண்டியதுதானே. ஏன் குறை கூற வேண்டும். அவர்கள் நிகழ்ச்சியை நடத்தி சம்பாதித்து கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.