மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ.. உங்களுக்கு என்னாச்சு! மனோபாலாவின் ஒத்த செல்பியால் பதறிய ரசிகர்கள்! அலறியடித்து அவரே அளித்த விளக்கம்!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், காமெடி நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனோபாலா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, பலரும் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு வருவது போன்று தானும் ஒரு செல்பி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில், அவரது ரசிகர்கள் மனோபாலாவின் உடம்புக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என பதறிப்போனர்.
— Manobala (@manobalam) May 15, 2021
இந்த நிலையில் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில், என் அன்பு மக்களே..நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்.. ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என விளக்கமளித்துள்ளார்.
என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை...அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
— Manobala (@manobalam) May 16, 2021