மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் அப்பாவிற்காக நடிகர் மனோபாலாவின் மகன் பாடிய கடைசி பாடல்.! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலமாக வலம்வந்தவர் மனோபாலா. அவர் சினிமா துறையில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கினார். பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த அவர் ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் நடிகராக அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நூறு திரைப்படங்களில் மிகவும் அசத்தலாக நடித்துள்ளார். இவரது உடற்பாவனை, நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. நடிகர் மனோபாலாவிற்கு கடந்த சில காலங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மே மூன்றாம் தேதி காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது கடைசி தருண வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மனோபாலா அமர்ந்திருக்க, அவரது மகன் ஹரீஷ் அவருக்காக முருகன் பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ மனோபாலாவின் வேஸ்ட் பேப்பர் யூடிப் சேனலில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.