மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய யூடியூப் சேனலை தொடங்கிய நடிகர் மனோபாலா!! அதில் என்னவெல்லாம் வரப்போகுது தெரியுமா??
தமிழ் சினிமாவில் தனது வசனங்களாலும், உடல் அமைப்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் காமெடி நடிகர் மனோபாலா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மனோபாலா காமெடி நடிகர் மட்டுமின்றி, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகையே கலக்கி வரும் மனோபாலா தற்போது வேஸ்ட் பேப்பர் என்ற புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார் . இந்த யூடியூப் சேனலில் நாட்டு நடப்பு,ஆன்மீகம், விளையாட்டு போன்ற பல அம்சங்களை கொண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த யூடியூப் சேனலை பிரபல இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாரதிராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் மனோபாலா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள முதல் வீடியோவில் அத்திவரதர் குறித்து பேசியுள்ளார்.