மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இப்படி சொல்லிபுட்டாரே! சிவகார்த்திகேயன் செய்த காரியத்தால் நொந்துபோன நடிகர் மனோபாலா!!
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் ஷிவாங்கி, ஆர்ஜே.விஜய், பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. டான் படம் வரும் மே 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் டான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டான் படத்தின் டிரைலர் ரிலீஸ் சிறப்பு போஸ்டருடன் அறிவித்த சிவகார்த்திகேயன் அதனை தன்னுடன் படத்தில் பணியாற்றிய பிரபலங்களுக்கு டேக் செய்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் மனோபாலா எங்கப்பா என் பேரு? என சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் இப்படி சீனியர் நடிகரை புறக்கணித்து வருத்தப்பட வைக்கலாமா என கேட்டு வருகின்றனர்.
எங்கப்பா என் பேரு...??? https://t.co/4gzsn1B7Hl
— Manobala (@manobalam) May 6, 2022