மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப வழக்கத்தை தகர்த்து, நடிகர் மனோபாலாவின் மனைவி செய்த தரமான காரியம்.! நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்து ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் மனோபாலா. அவர் நடிகராகவும் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர ரோலில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் லியோ, இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். மனோபாலா சதுரங்க வேட்டை 2, பாம்புசட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மே 3ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மனோபாலாவின் மறைவிற்கு பின் அவரது மனைவி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது, அவர்களது வழக்கப்படி ஒருவர் இறந்தபின் அவரது உடைமைகள் வீசப்பட்டு எரிக்கப்படுமாம். ஆனால் மனோபாலாவின் மனைவி கணவரது உடைமைகளை எரிக்காமல் அனைத்தையும் அனாதைகள் இல்லம் ஒன்றுக்கு வழங்கியுள்ளாராம். கைக்கடிகாரத்தை மட்டும் அவரது நினைவாக எடுத்துக் கொண்டாராம். இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.