மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தணிக்கை குழுவை கடுமையாக திட்டிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் 80களின் ஆரம்பங்களில் இருந்து வில்லன் நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் முயற்சி செய்தாலும் வில்லன் நடிகராகவே இவர் மக்களின் மனதில் பதிந்துள்ளார். தற்போது மீண்டும் தனது திரை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் மன்சூர் அலிகான்.
இதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சரக்கு' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசினார்.
மன்சூர் அலிகான், "சரக்கு திரைப்படம் தணிக்கை குழுவிடம் சென்றபோது அம்பானி, அதானி போன்ற பெயர்களை நீக்கிவிட்டனர். தற்போது கருத்து சுதந்திரத்திற்கு கூட இடமில்லை. நான் ஒன்றும் நெளியும் புழு கிடையாது. என்னை காலில் போட்டு மிதிக்க முடியாது" என்று கடுமையாக திட்டியுள்ளார்.