மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிஜ கைதியானதால் கைதி படத்தை மிஸ் செய்த மன்சூர் அலிகான்.!
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கைதி. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தீனா, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தளபதி விஜய்யின் பிகில் படத்துடன் போட்டியிட்ட, கைதி திரைப்படம் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தப் படத்தின் கதையை முதலில் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதி இருந்ததாக கூறியிருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது படம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கைதி படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த சமயம் நான் கைதாகி ஜெயிலுக்கு சென்றதால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.