பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கைதி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த நடிகர்தானாம்! யார் தெரியுமா?
மாநாடு என்ற வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக மாறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற மற்றொரு மெகாஹிட் படத்தையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. தற்போதுவரை சுமார் 80 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் 100 கோடி க்ளப்பில் கைதி படம் இடம் பெரும் எனவும் கூறப்படுகிறது.
படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். ஆனால், கைதி படம் முதலில் நாயகனாக நடிக்க இருந்தது பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானாம். அவரை மனதில் வைத்துதான் இயக்குனர் கைதி படத்தின் கதையை எழுதியுள்ளார். அதன்பின்னர்தான் கார்த்தியுடன் ஒப்பந்தம் செய்து, பின்னர் அவருக்கு ஏற்றாற்போல் படத்தின் கதையில் சற்று மாற்றம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.