மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரிய தப்பு பண்ணிட்டீங்க.! தமிழ்நாடே என் பக்கம்தான். திரிஷா விவாகாரத்தில் பொங்கி எழுந்த நடிகர் மன்சூர் அலிகான்!!
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில், லியோ படத்தில் தனக்கு நடிகை திரிஷாவை பாலியல் தொந்தரவு செய்வது போன்ற காட்சி கிடைக்கவில்லை என கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதுகுறித்து நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவர் போன்றவருடன் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை. இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள் எனக் கூறியிருந்தார்.
மேலும் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
அப்பொழுது அவர், நான் திரிஷாவை பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. அவரை பாராட்டிதான் பேசினேன். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் பெரிய தவறு செய்துவிட்டது. இதுகுறித்து அவர்கள் என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தரேன். நேற்று கொடுத்த செய்தி அறிக்கையை வாபஸ் வாங்கிருங்க.
இதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கொடுங்கள். நான் எழுந்தால் பிரளயமே கிளம்பும். தமிழ்நாடே என் பக்கம். மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். மக்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன் எனக் கூறியுள்ளார்.