மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்! ஏன் இந்த அதிரடி நடவடிக்கை!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் கொடூர, மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர் பிரபு நடிப்பில் வெளிவந்த 'வேலை கிடைச்சுருச்சு' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
250 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் அதனைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கினார். அவர் அண்மையில் நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனோ தடுப்பூசி குறித்தும் அவதூறான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும் அவர் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு சூளைமேடு, பெரியார் பாதையில் சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டை கட்டுவதற்காக அவர் சுமார் 2500 சதுரடி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.