திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking : மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்படும் மன்சூர் அலிகான்.!
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரமானது இன்று மாலையுடன் நிறைவடைகின்றது. இதன் காரணமாக, தமிழக அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் போட்டியிடுகின்றார்.
எனவே, குடியாத்தம் பகுதியில் இன்று அவர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர் பாராத விதமாக அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனைத் தொடர்ந்து அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, அவரது உடல்நிலை தீவிர பாதிப்பு அடைந்துள்ளதால் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மன்சூர் அலிகான் கொண்டு செல்லப்படுகிறார்.