"அந்த விஷயத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்" மாரிசெல்வராஜின் உருக்கமான பேச்சு..



Mari selvaraj recent interview

அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், "மாமன்னன் திரைப்படம் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன் நான் தூக்கமில்லாமல் தவித்தேன்" என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது கவனத்தைக் கவர்ந்துள்ளது.

Mamannan

பிரபல எழுத்தாளரும், கதை சொல்லியுமான 'பவா செல்லத்துரை' அவர்களின் "சொல்வழிப் பயணம்" என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், "எந்த ஒரு புத்தகமோ, திரைப்படமோ வெளிவந்த பிறகு மக்கள் தான் அவற்றின் தரத்தை முடிவு செய்ய வேண்டும்.

Mamannan

வாசிக்கவும், எழுதவும் மனிதர்களால் மட்டுமே முடியும். எழுத்தாளருக்கு இருக்கும் சுதந்திரம் கூட, சினிமாவில் இல்லை. வெளியே பேசுபவர்களால் 'மாமன்னன்' படம் ரிலீசாவத்ற்கு முன் தூக்கமில்லாமல் தவித்தேன். படம் வெளியான பிறகு தான், மக்கள் வேறு, வெளியே பேசியவர்கள் வேறு என்று புரிந்து கொண்டேன்" இவ்வாறு மாறி செல்வராஜ் பேசியுள்ளார்.