மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகரை கன்னத்தில் ஓங்கி அடித்த மாரி செல்வராஜ்.. இணையத்தில் திட்டி தீர்க்கும் கமல்ஹாசனின் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தமிழில் ஜாதிய ரீதியிலான பல திரைப்படங்கள் எடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் ஹிட்டானது.
இந்நிலையில், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞரை மாரி செல்வராஜ் அடித்துவிட்டார் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் படத்தில் ஏதோ ஒரு டயலாக் தவறாக பேசிவிட்டார் என்று மாரி செல்வராஜ் அவரை ஓங்கி அறைந்து விட்டாராம்.
இதன்பிறகு மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினார் என்று அந்த தெருக்கூத்து கலைஞர் ஒரு பேட்டியில் பேசினார். தற்போது இவர் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டி வெளியான சமயத்தில் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது கமல் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதன்படி சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் கமல்ஹாசனை அழைத்து 'தேவர்மகன்' படம் குறித்து பேசி அசிங்கப்படுத்தி விட்டார் என்று கமல்ஹாசனின் ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். இதனால் மாரி செல்வராஜை நீங்கள் மட்டும் உங்கள் படங்களில் ஒன்னும் தெரியாத ஒருவரை கூட்டி வந்து இப்படி அடிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நீங்க பேரும் புகழும் சம்பாதிக்க ஒன்னும் தெரியாத அப்பாவிய ஏன்டா கொடும படுத்துறீங்க??@mari_selvaraj pic.twitter.com/kqYroT0NWl
— . (@KombanMSD) June 20, 2023