குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"காதலும் தத்துவமும் நிறைந்த மாமன்னனை நான் கண்டுணர்ந்த பயணம்." மாரி செல்வராஜின் வைரல் ட்வீட்.!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடிகர்கள் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியது.
திரையரங்குகளில் வெளியாகிய மாமன்னன் 50 கோடிக்கும் மேல் வசூலை பெற்றதாக கூறப்பட்டது. படம் நெட்பிளிக்ட்ஸில் வெளியான பின் இந்திய அளவில் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டு, முதல் இடத்தை பிடித்தது. இதன்பின், நெட்டிசன்கள் மத்தியில் படம் குறித்த விமர்சனங்கள் அதிகரிக்க துவங்கியது.
இப்படம் மிகவும் நன்றாக இருந்ததாக பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அத்துடன் இதில் நடிகர் வடிவேலுவின் நடிப்பு மற்றும் வசனங்கள் மிகவும் அருமையாக இருந்ததாக அவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
— Mari Selvaraj (@mari_selvaraj) August 2, 2023
நன்றி #Vadivelu Sir ❤️❤️#Maamannan #MaamannanBlockbuster #1onNetflix @arrahman @Udhaystalin #FahadhFaasil @KeerthyOfficial @RedGiantMovies_… pic.twitter.com/vQFkmMCajT
இத்தகைய சூழலில் இயக்குனர் மாரி செல்வராஜ் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போது வடிவேலு காரில் பாடிய ஒரு பாடலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, "காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான். நன்றி Vadivelu Sir" என்று தெரிவித்துள்ளார்.