மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி ரசிகர்களே தயாரா! பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப மாஸ்டர் படக்குழு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
Are you ready to listen to the #ChittiStory ?
— #MASTER (@MasterOfficiaI) December 24, 2020
Stay tuned for this scintillating number tomorrow #Master @actorvijay @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial @MalavikaM_ @SunTV @EastCoastPrdns @SonyMusicSouth pic.twitter.com/FyDwbJ2HHj
மேலும் இதன் டீசர் தீபாவளியன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கில் மாஸ்டர் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் தெலுங்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி என்ற பாடல் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தமிழில் குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.