மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழுக்கு முக்கியத்துவம்.. தமிழ் பெண்ணை மணக்கிறார் க்ளென் மேக்ஸ்வெல்..! இந்த வேற லெவல் கல்யாண பத்திரிக்கையை பார்த்தீங்களா!
ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்ததிற்காக க்ளென் மேக்ஸ்வெல்ளை தக்கவைத்துக் கொண்டது. நேற்று மெகா ஏலம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மேக்ஸ்வெல் திடீரென நேற்று ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதாவது தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவர் மணக்கவுள்ளார். அதற்கான பத்திரிகையும் வெளியிடப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.