#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரவு நேரங்களில் செல்போனை ஆஃப் செய்துவிடும் நடிகர் மயில்சாமி.! அட.. இதுதான் காரணமா?? அவரே கூறிய தகவல்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் மாபெரும் பிரபலமடைந்த நடிகர் மயில்சாமி.100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் உடனே செய்யக் கூடியவர்.
அவர் நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது பழைய வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் இரவில் தான் போனை ஆஃப் செய்து விடுவேன் என்றும் அதற்கான காரணம் குறித்தும் கூறியது பரவி வருகிறது.
அவர் கூறியதாவது, சிலர் விலையுயர்ந்த செல்போன் வைத்திருந்தாலும் நாம் போன் செய்தால் எடுப்பதில்லை. ஆனால் நான் யார் எந்த நேரத்தில் போன் செய்தாலும் உடனே எடுத்து பேசி விடுவேன்.இவ்வாறு ஒரு நாள் இரவு 2மணிக்கு நபர் ஒருவர் எனக்கு போன் செய்து, எந்த நடிகர் எந்த நடிகையை வச்சிருக்காங்கன்னு கேட்டார்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், யார் யாரை வைத்திருந்தால் எனக்கு என்ன? அவர் ஏன் அப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்? என்று யோசித்தே இரவு முழுதும் எனக்கு தூக்கமே வரவில்ல. அப்பொழுதிலிருந்து இரவு நான் போனை ஆப் செய்து விடுவேன் என காமெடியாக கூறியுள்ளார் அந்தக் கதையை நினைவுகூர்ந்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.