காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ப்பா.. அந்த ஸ்மைல் போதுமே.! பொறாமை படவைக்கும் பேரழகில் ஜொலிக்கும் நடிகை மீனா.! கியூட் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகையாக, இளைஞர்களின் கனவு நாயகியாக, வலம் வந்தவர் நடிகை மீனா. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை மீனா தற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். சாப்ட்வேர் இன்ஜினியரான அவர் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கணவரின் மறைவால் மீளா துயரத்தில் இருந்த நடிகை மீனா தற்போது மெல்ல அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது இளம் ஹீரோயின்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு மிகவும் அழகாக ஜொலிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.