மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வேறு வழி இல்லாமல் தான் இந்த படத்தில் நடித்தேன்" நாட்டாமை படம் குறித்து மனம் திறந்த மீனா..
1994ம் ஆண்டு இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் "நாட்டாமை". இப்படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் அண்ணன் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பூவும், தம்பிக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருந்தனர்.
மேலும் மனோரமா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில், சங்கவி, பொன்னம்பலம், வினுச்சக்கரவர்த்தி, வைஷ்ணவி, பாண்டு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் "பெத்தராயிடு" என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை மீனா சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அவர் கூறியதாவது, ""நாட்டாமை" படத்தில் என்னை நடிக்க வைக்க மிகவும் வற்புறுத்தினார்கள். 20 நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று கூறினார்கள்.
ஏற்கனவே குஷ்பூ, சங்கவி ஆகியோர் நடிப்பதால் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்து, 'நான் இந்தப் படத்தில் நடிக்க முடியாது. என்னை விட்ருங்க' என்று கெஞ்சினேன். பிறகு கடைசி நேரத்தில் மனம் இறங்கி நடித்தேன். அப்போதிருந்து கே. எஸ். ரவிக்குமார் எனது விருப்பமான இயக்குநராகி விட்டார்" என்று கூறியுள்ளார்.