மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அஜித்திற்கு ஜோடியாக நான் தான் நடிப்பேன்" அடம்பிடித்த நடிகை மீனா..
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியுள்ளார்.
தனது கண்ணழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை மீனா திருமணத்திற்கு பின்பு திரைத்துறையில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது. சமீபத்தில் இவர் கணவர் இறந்த செய்தி திரையுலகத்தில் பேரதிர்ச்சியாக இருந்தது.
இதனை அடுத்து தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில் சமீபத்தில் இவர் கலந்து கொண்டுள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்ற நிலையில் வில்லன் திரைப்படத்தில் வேறொரு கதாநாயகியை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அஜித்திற்கு ஜோடியாக மீனா நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். இதனால்தான் வில்லன் திரைப்படத்தில் மீனா நடித்திருந்தார் என்று இப்படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.