#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்ளீஸ்.. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க! நடிகை மீனா வெளியிட்ட ஷாக் தகவல்! கடும் வருத்தத்தில் ரசிகர்கள்.!
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இன்றுவரை குறைந்தபாடில்லை. சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு பின் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். மேலும் பலரும் உயிரிந்த துயரமும் நேர்ந்தது.
இந்நிலையில் கொரனோ பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வராமல் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுகொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றர். இந்த நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் கடந்த சில காலங்களாக கோரதாண்டவமாட துவங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகை மீனாவின் குடும்பத்தினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 2022 புத்தாண்டில் எங்க வீட்டுக்கு முதல் விருந்தாளியாக கொரோனா வந்துள்ளது. அதற்கு என் மொத்த குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை விடபோவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். வைரஸை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.