#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் புகழ் மீரா மிதுனுக்கு அடித்த லக் - வெளியான புதிய தகவல்!
பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.
மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. கடையில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடனே தனது மாடலிங் வேலையை மீண்டும் தொடர துவங்கிவிட்டார்.கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோகள் போன்றவற்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது மீரா மீதும் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. என்னவெனில் விஜய் ஆண்டனி-அருண் விஜய் நடிக்கப்போகும் அக்னி சிறகுகள் என்ற புதிய படத்தில் நடிக்கிறாராம்.
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மூடர் கூடம் நவீன் இப்படத்தை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.