அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
"நல்லா இருந்த மனுஷனை என்னடா பண்ணீங்க?" கதறி அழுத மீசை ராஜேந்திரன்!
தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டர்களிலும், சிறிய குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். மேலும் இவர் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் 250க்கும் மேற்பட்ட துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
1990களில் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான "மாவீரன் ஹாதிம்" தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பெரும்பாலும் இவர் சினிமாவில் போலீஸ் வேடத்தில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் லியோ திரைப்பட வெளியீட்டின்போது விஜய்க்கு எதிராகப் பேசி சர்சையைக் கிளப்பியிருந்தார்.
அதன்படி லியோ, ஜெயிலர் வசூலை முறியடித்துவிட்டால் தான் தனது மீசையை எடுத்து விடுவதாக கூறிய இவர், லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியானபோதும், அது பொய்யான தகவல் என்று கூறினார். இந்நிலையில், ஒரு பேட்டியில், "நல்லா இருந்த மனுஷனை ஏண்டா இப்படி பண்ணிடீங்க?
யார் எப்போ அவரை தேடிப் போனாலும், சாப்பாடு போடாம அனுப்பவே மாட்டார். அவரை இப்படி ஒரு நிலையில் பார்க்க முடியல" என்று கூறி கதறிக் கதறி அழுதார் மீசை ராஜேந்திரன். சிங்கம் போல் இருந்த மனுஷன் இப்படி வீல் சேரில் கஷ்டப்படுவதை பார்த்து பலரும் வருந்து வருவது குறிப்பிடத்தக்கது.