சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
தமிழக அரசியல்வாதி மகனை திருமணம் செய்யப்போகும் தனுஷ் பட நடிகை.?!
தமிழில் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பிரபல நடிகை மேகா ஆகாஷ். அவர் தனது அழகான கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை பெற்றார்.

தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் தற்போது நடிகை மேகா ஆகாஷ் தொடர்ந்து நடித்து வருகின்றார். ஏற்கனவே அவருக்கு வாரிசு நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இது பற்றி எல்லாம் மேகா ஆகாஷ் எந்தவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளாமல், பதில் அளிக்காமல் மௌனமாக இருந்து வந்தார். இத்தகைய நிலையில், நடிகை மேகா ஆகாஷ் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அது அவரது திருமணம் பற்றிய தகவல் தான். தமிழக எம்.எல். ஏ ஒருவருடைய மகனை தான் மேகா ஆகாஷ் திருமணம் செய்ய உள்ளாராம். வழக்கம்போலவே, இதுவும் வதந்தியா அல்லது உண்மையா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.