53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
விஜய்யின் மெர்சல் பட தயாரிப்பாளருக்கு இப்படியொரு பரிதாப நிலையா? அவரே வருத்ததுடன் கூறிய பகீர் தகவல்!
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் பெரும் பட்ஜெட்டில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமாக செயல்பட்டு வருபவர் ஹேமா ருக்மணி.
இந்நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து இறுதியாக வெளிவந்த மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் வசூல் சாதனையும் செய்தது. இந்நிலையில் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஹேமா ருக்மணி கூறுகையில், நான் மறுஜென்மம் எடுத்து வந்துள்ளேன். எனக்கு கடல் உணவுகளில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதனால் கடல் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். இந்நிலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நான் உணவு பரிமாற வருபவர்களிடம் என்ன ஆயில் பயன்படுத்தினீர்கள் என கேட்டேன்.
அவர்கள் ரீபைண்ட் ஆயில் என கூறினர். நான் சூரியகாந்தி ரீபைண்ட் ஆயில் என நினைத்து விட்டேன்.ஆனால் அது கடலை ரீபைண்ட் ஆயில். அது எனக்கு உடலில் அலர்ஜியை ஏற்படுத்தி கை, கால் மற்றும் முகம் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. மேலும் ஒரே இரவில் நான்கு கிலோ எடை கூடியது. எனது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.