53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தளபதி விஜய்யின் ரீல் மகனுக்கு இவருடன் நடிக்க ஆசையா!! விரைவில் நடக்குமா? செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஹிட் திரைப்படம் மெர்சல். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் பிளாஷ்பேக்கில் வரும் விஜய் மற்றும் நித்யா மேனன் ஜோடியின் மகனாக நடித்திருந்தவர் அக்ஷத் தாஸ்.
அந்த சிறுவன் நடிகர் விஜய்யுடன் சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு பெருமளவில் கவர்ந்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அக்ஷத் தாஸிற்கு பாலிவுட் சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்த விஜய் தனது ரீல் மகனுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்நிலையில் அக்ஷத் தாஸ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்பொழுது அவர் எனக்கு தல அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசை இருப்பதாகவும், விரைவில் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய்யின் மெர்சல் மகனை விரைவில் அஜித்துடன் பார்க்கலாம் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.